தமிழ்நாடு அரசு மேலதிக நலத்திட்ட விரிவாக்கங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சூழலில், சுதந்திர தின உரையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை உயர்த்தியது போன்ற அதிரடி முடிவுகளைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்க கீழ் வழங்கப்படும் உதவித்தொகையையும் உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியின் பயனுள்ள மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளது, இந்த உதவித்தொகை உயர்வு குறித்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
