திடீர் திருப்பம்…. உண்மையை உடைத்த ராதிகா?…. பாஜகவில் புறக்கணிப்பு… தவெகவில் திடீர் என்ட்ரி?… சரத்குமாரின் மெகா பிளான்…!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், அவருக்கு இதுவரை பாஜகவில் எந்தவித பொறுப்பும் வழங்கப்படாததால் அவர் தவெக கட்சியில் இணைவது குறித்து யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அளவிலான பாஜக பொறுப்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறாததை முன்கூட்டியே உணர்ந்தே அவர் அண்மையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, மேடைகளில் ராதிகா சரத்குமார் விஜய் குறித்துப் புகழ்ந்து பேசி வருவது, அவர்கள் தவெகவை நோக்கி நகர்வதன் அறிகுறியே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.