மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வரும் நிலையில், தகுதியற்ற நபர்கள் திட்டத்தில் பயன்பெறுவதைத் தடுக்க தமிழக அரசு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி மற்றும் நகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் விதிமுறைகளை மீறி மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருவது கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால், அவர்களது பெயர்களைப் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்தகைய முறைகேடுகளைக் களைந்து, அரசு நிர்ணயித்துள்ள தகுதி வரம்பிற்குள் வரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே வருவாய்த்துறை மூலம் இந்தத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
