முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த 92 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்பு வேலியைச் சுலபமாக ஏறித் தாண்டிய காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வெறும் 24 வினாடிகளுக்குள் வேலினுடைய உச்சிக்குச் சென்று, மறுபக்கம் அசால்ட்டாகக் குதித்து அந்தப் பாட்டி வெளியேறிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய அந்த இல்லத்தின் இயக்குநர், அந்த பாட்டி தீவிர நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு இளமைக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதிலும் ஏறுவதிலும் அதிக ஆர்வம் இருந்தது என்றும் தெரிவித்தார். வேலியைத் தாண்டித் தப்பிய பாட்டியை, 25 நிமிடங்களுக்குள் இல்லத்தின் அருகே பத்திரமாக மீட்ட அதிகாரிகள், அவரை மீண்டும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.
