மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ‘மஹஃபில்’ உணவகத்தில் முஸ்கான் என்ற இளம் பெண் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் இணைந்து பவன் என்பவனும் அதே உணவகத்தில் வேலை செய்து வந்த நிலையில், உணவு சமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பவன் சரியாக வேலை செய்யாதது குறித்து உணவக மேலாளரிடம் முஸ்கான் புகார் அளித்ததால், பவன் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால் எழுந்த ஆத்திரத்தில் உணவகத்திற்குள் வைத்து முஸ்கானை பவன் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார. இந்த அதிர்ச்சி சம்பவம் உணவகத்தின் சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய பவனைக் கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
