காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான ‘ஆய்கர் பவன்’ கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் திடீர் தீ விபத்து உருவானது. ஏழு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் அடித்தளத்தில் மட்டுமே தீ பரவியிருந்தாலும், மேல் தளங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை; அதேசமயம், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிறப்பு அவசரக்கால வாகனங்களுடன் விரைந்து வந்த மும்பை தீயணைப்புப் படையினர், மீட்புப் பணிகளை உடனடியாக முடுக்கிவிட்டனர். இவர்களில் ஒரு குழுவினர் அடித்தளத்தில் பற்றி எரியும் தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு படையினர் ஜன்னல்கள் வழியாக நீண்ட ஏணிகளைப் பயன்படுத்தி மாடிகளில் சிக்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர். மாநகராட்சி பேரிடர் மேலாண்மைப் பிரிவின் ஒருங்கிணைப்போடு, மூத்த தீயணைப்பு அதிகாரிகளின் நேரடிப் பார்வையில் முழுமையான மீட்பு நடவடிக்கைகள் அங்கு துரிதமாக நடைபெற்று வருகின்றன.