ஐயோ அவரு பாவும்..! காபி கடையில் வெடித்த திடீர் மோதல்.. 70 வயது முதியவர் மீது கொடூரத் தாக்குதல்… பதறவைக்கும் வீடியோ காட்சி…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில், நடக்கவே மிகவும் சிரமப்படும் 70 வயதான முதியவர் ஒருவர் அங்கு அமர்ந்திருந்த சிறுமியின் தலையைத் தட்டிக்கொடுத்துள்ளார். இதனை ஏற்காத அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் முதியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவருடன் வந்த நபர் அந்த முதியவரைக் கடுமையாகக் கீழே தள்ளிவிட்டுள்ளார். கண்காணிப்புக் கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ள இந்தச் சம்பவத்தை, பாதிக்கப்பட்டவரின் மகன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த முதியவருக்குக் கடுமையான முதுகுவலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவரைத் தள்ளிவிட்ட நபர் பின்னர் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டு, அவருக்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொடுத்த போதிலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வைரலாகும் இந்தக் காணொளியின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள சிங்கப்பூர் காவல்துறையினர், முதியவரைத் தாக்குவதற்கு முன்பும் பின்பும் நடந்த முழுமையான சூழல் குறித்துத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.