“3 நாளா எங்க போனீங்க?”…. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனை வெளுத்து வாங்கிய தனுஷின் உறவினர்கள்…. இரவில் பதற்றம்….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

சென்னையில் உயிரிழந்த மாணவன் தனுஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை, மாணவனின் உறவினர்கள் ஆவேசத்துடன் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கழித்து அமைச்சர்கள் வருகை தந்ததைக் கண்டித்த உறவினர்கள், “இவ்வளவு நாள்களாக வராமல் தற்போது எதற்காக வந்தீர்கள்?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அமைச்சர்களின் வருகையையொட்டி அங்கு அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர்கள், இதேபோல பள்ளிகளிலும் உரிய பாதுகாப்பை அரசு வழங்கியிருந்தால் மாணவன் தனுஷ் உயிரிழந்திருக்க மாட்டான் எனத் தங்களுடைய ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தினர்.