அய்யய்யோ… பெட்ரோல் பங்க் அருகே நள்ளிரவில்… திடீரென பற்றி எரிந்த மெர்சிடிஸ் கார்… பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 17, 2026

Spread the love

பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சிகாலி பகுதியில் உள்ள ஷிவ் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் ஆடம்பர மெர்சிடிஸ் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காரின் எஞ்சின் மற்றும் பாப்பட் பகுதியில் பிடித்த தீ, வேகமாக முன்பக்கம் முழுவதும் பரவியது. பெட்ரோல் பங்கிற்கு மிக அருகில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். பெட்ரோல் பங்க் அருகில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் மற்றும் சேதம் தவிர்க்கப்பட்டது.

   

https://twitter.com/VaradBhatkhande/status/2088927035800293410/video/1

   

இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், காரின் முன் பகுதி மற்றும் எஞ்சின் முற்றிலும் எரிந்து பலத்த சேதமடைந்தது. காரில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை; இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.