ஜோத்பூரில் உயர்கல்விக்காக அறை எடுத்துத் தங்கிப் படித்து வந்த மகளுக்கு, தன் தாயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வீட்டில் இருந்து அவசர அழைப்பு வருகிறது. பதறியடித்துக்கொண்டு உடனடியாகத் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வரும் மகள், அங்கே தாய் எவ்விதப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோபத்தின் எல்லைக்கே செல்லும் அவள், “என்னை ஏன் இப்படிப் பொய் சொல்லி வரவழைத்தீர்கள்?” என்று பெற்றோர் மீது பாய்ந்து குடம்பத்தில் பெரும் புயலைக் கிளப்புகிறாள்.
மறுநாள் காலையில், மகளுக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணப் பெண் பார்க்கும் படலத்திற்காக ஒரு பையனின் குடும்பத்தினர் வீட்டிற்கு வருகிறார்கள். சூழலைப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பும் மகளுக்கு, பெற்றோர் தன்னிடம் மறைத்த உண்மை மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்குகிறது. சற்றும் எதிர்பாராத அந்தச் தருணத்தில் அமைதியை உடைக்கும் மகள், “எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது” என்ற அதிரடி உண்மையைக் கூறி அனைவரையும் உரைய வைக்கிறாள்.
மகளின் இந்த எதிர்பாராத உண்மையைக் கேட்டவுடன், கற்பனையான கட்டுப்பாடுகளிலும் பழைய எண்ணங்களிலும் மூழ்கியிருந்த தாய்க்கும் தந்தைக்கும் சட்டென்று சுயநினைவு திரும்புகிறது. தங்கள் மகளின் விருப்பத்தையும் வாழ்க்கையையும் அறியாமல், அவசரப்பட்டு பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்த தவறை உணர்கிறார்கள். உடனடியாக அங்கே வந்திருந்த பையனின் குடும்பத்தினரிடம் தங்கள் அறியாமைக்காகவும், அவர்களை வீணாக வரவழைத்ததற்காகவும் மனமார மன்னிப்பு கேட்கிறார்கள்.
