அடேங்கப்பா… கல்யாணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி ஹெலிகாப்டர்ல போறாங்களா?… 20 லட்சத்தை பறக்கவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரமாண்ட திருமணம்… ஷாக்கிங்கில் உறைந்த கிராம மக்கள்…!

By Swetha on ஆவணி 16, 2026

Spread the love

குண்டூர் மாவட்டம் லால்புரம் கிராமத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்று, மணமக்களின் ஹெலிகாப்டர் பயணத்தால் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தனது திருமண நாளை வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற விராம்பிய மணமகன் சாய் குமார், இதற்காகவே பிரத்யேகமாக ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

திருமணச் சடங்குகள் அனைத்தும் சுபமுஹூர்த்தத்தில் இனிதே நிறைவடைந்ததும், புதிதாகத் திருமணப் பந்தத்தில் இணைந்த மணமக்களும் அவர்களது குடும்பத்தினரும் அந்த ஹெலிகாப்டரில் ஏறினர். கிராமத்தின் வான்வெளியில் குடும்பத்துடன் பறந்து வட்டமடித்து, தங்கள் மகிழ்ச்சியைத் தனித்துவமான முறையில் கொண்டாடினர்.

   

தனது குடும்பத்தினருடன் இந்த வான்வழிப் பயணத்தை அனுபவிப்பதற்காக மணமகன் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார். மணமக்களும் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் ஜாலியாகப் பறந்த இந்த அழகிய காட்சியைக் கிராம மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்தனர்.