“அமலாக்கத்துறை இல்லை… இனி ஸ்டாலின் ரிப்போர்ட்”…. 70+ மா.செ-க்களுக்கு செக் வைத்த திமுக தலைமை… திமுகவில் அதிரடி கிளீன்-அப்….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

திமுகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 70 வயதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக வாய்ப்பளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர்களே அதிகார மையங்களாகத் (Power Centers) திகழும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எனத் தெரிகிறது. மேலும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முக்கிய உள்கட்சி மாற்றங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.