கிரேட்டர் நொய்டா வெஸ்டில் உள்ள ‘ஹவேலியா வலென்சியா ஹோம்ஸ்’ குடியிருப்பு ஏ-டவரில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 5 வயது சிறுமி தனது பணிப்பெண்ணுடன் மின் தூக்கியில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக மின் தூக்கி 13 மற்றும் 12-வது தளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
மின் தூக்கி செயலிழந்ததும் பணிப்பெண் அவசர உதவி பொத்தானை அமுக்கியபோதிலும் உடனடியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. மின் தூக்கிக்குள் இருட்டாகவும், காற்றோட்டம் இன்றி புழுக்கமாகவும் இருந்ததால் அந்த சிறுமி பயந்து அழத் தொடங்கியுள்ளார். தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் குடியிருப்பாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
https://www.instagram.com/reel/DcBAvOJy6pl/?utm_source=ig_web_button_share_sheet
சம்பவ இடத்திற்கு வந்த பராமரிப்புக் குழுவினரும் உள்ளூர்வாசிகளும் சேர்ந்து சுமார் 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு மின் தூக்கியின் கதவுகளைத் திறந்து சிறுமியையும் பணிப்பெண்ணையும் பத்திரமாக மீட்டனர். அதிக அளவில் பராமரிப்பு கட்டணம் வசூலித்தும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
