மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ 1,000 தவணைத் தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்படவுள்ளது. இருப்பினும், நீண்ட நாட்களாகச் செயல்பாட்டில் இல்லாத அல்லது கேஒய்சி விவரங்கள் முறையாகப் புதுப்பிக்கப்படாத பழைய வங்கிக் கணக்குகளுக்கு அரசு அனுப்பும் இந்தத் தொகை வரவு வைக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுக்கு இடையே பெயர் அல்லது முகவரிப் பிழைகள் போன்ற வேறுபாடுகள் இருக்கும் பயனாளிகளுக்கும் இந்த உதவித்தொகை சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, இந்தத் தொகையைத் தடையின்றிப் பெற உங்கள் வங்கிக் கணக்கில் KYC சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனே சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.
