அடிங்க அவனை…! அத்துமீறிய முதியவர்… காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த பெண்… இணையத்தில் வைரலாகும் காட்சி…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

கோலார் மற்றும் பங்கார்பேட்டை இடையே இயக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர், தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். அப்பெண்ணின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து அவர் முத்தமிட்டதால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அந்த நபரைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். இச்சம்பவத்தைக் கண்ட சக பயணிகளும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் களமிறங்கி, முதியவரை கடுமையாகத் தாக்கினர்.

பயணிகளின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த நபர், தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும், எனவே தன்னை விட்டுவிடும்படியும் கண்ணீருடன் கெஞ்சினார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அவர், உடனடியாக அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டுப் பேருந்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இணையத்தில் வைரலாகப் பரவி வரும் இந்தச் சம்பவம் குறித்து தற்போது வரை எவ்வித வழக்கும் பதியப்படவில்லை என்றாலும், வீடியோ ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.