BREAKING: “கடிதம் எழுதினா மட்டும் போதுமா CM விஜய்?”… உடனடியாக பாய்ந்த பிரேமலதா… தமிழக அரசியலில் புது புயல்….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர் பிரச்சனைகளுக்கு வெறுமனே கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வெறும் கடிதப் போக்குவரத்தோடு நின்றுவிடாமல், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக மீட்டு தாயகம் கொண்டுவரத் தேவையான நடைமுறைப்பூர்வமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.