ஸ்டாலின் போட்ட ஒரே போடு…. ஆகஸ்ட் 22-ல் தூக்கப்படப் போகும் திமுக தலைகள் யார்?…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு…..!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கழகத்தின் கள ஆய்வுக் குழு மற்றும் மறுசீரமைப்புக் குழு அளித்த விரிவான அறிக்கைகளின் அடிப்படையில், உட்கட்சி நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்களும் புதிய முடிவுகளும் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்த பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், இக்கூட்டம் திமுக நிர்வாகிகளிடையே பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.