“சூரியனுக்கே வியர்த்துடுச்சு”… சட்டசபையில் தவெக அமைச்சர் வினோத் பஞ்ச்…. திமுகவுக்கு OPS கொடுத்த அதிடி பதிலடி….!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள திமுகவின் தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அவையில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு முதலமைச்சர் விஜய்யும், அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ் மோகன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், அவை நடவடிக்கைகள் தினசரி காரசாரமான விவாதங்களுடன் அரங்கேறி வருகின்றன.

இந்தச் சூழலில் இன்று சட்டமன்றத்தில் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், “அனைவருக்கும் சூரியனால் தான் இதுவரை வியர்த்தது. ஆனால், முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்தச் சூரியனுக்கே வியர்த்துவிட்டது” என திமுகவின் தேர்தல் சின்னமான சூரியனைக் குறிப்பிட்டு சுவாரசியமாகப் பேசினார். இதைக் கேட்டதும் குறுக்கிட்ட அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம், “இதுவரை எவராலும் நெருங்க முடியாத உச்சகட்ட வெப்பத்தில்தான் சூரியன் இருக்கிறது; எத்தனையோ விண்வெளி விஞ்ஞானிகள் முயன்றும் அங்கே ராக்கெட்டுகளை ஏவ முடியவில்லை” எனக் கூறி தனது பாணியில் பதிலடி கொடுத்தார். இந்த சுவாரசியமான சொல்லாடல்களால் இன்றைய சட்டமன்றக் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.