மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டம், அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஷாகாத் கிராமத்தில் 12 வயது சிறுவன் ஒருவனை வெறிநாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது.
அந்தச் சிறுவன் வீதியின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் பாய்ந்த வெறிநாய் அவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக நாயை விரட்டி அடித்து அவனைப் போராடி மீட்டனர்.
https://twitter.com/nextminutenews7/status/2087044947879006563/video/1
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன், உடனடியாக மீட்கப்பட்டு சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள புகழ்பெற்ற காதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
