திக் திக்..! இன்ஸ்டாகிராம் காதலால் வந்த வினை… தாய், மகள் கொடூரக் கொலை… ரகசிய கல்யாணம் செய்த கணவனின் வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 11, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வந்த பனியன் தொழிலாளி பழனிச்சாமியின் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகள் பூவரசி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த பயங்கர தாக்குதலில் தாய் மற்றும் மகள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து தப்பியோட முயன்ற கொலையாளியை மடக்கிப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷய் என்பதும், பூவரசியும் அவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் வழியே பழகி, சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

   

இன்ஸ்டாகிராம் காதல் மற்றும் ரகசியத் திருமணம் குறித்து அறிந்த பூவரசியின் தாய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டித்ததால், பூவரசி அக்ஷயுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அக்ஷய், ஆத்திரத்தில் அரிவாளுடன் பூவரசியின் வீட்டிற்குள் புகுந்து தாய், மகள் இருவரையும் வெட்டிக்கொலை செய்தது அம்பலமானது. தற்போது காவல்துறையினர் அக்ஷயைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.