“எங்க அக்கா பத்தி பேசுனா ஆர்ப்பாட்டம் வெடிக்கும்”…. முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த திரிஷா ரசிகர்கள்…. மதுரையில் பறந்த ரவுண்ட் போஸ்டர்கள்…!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து, விஜய்யின் தலைமையில் அரசு செயல்பட்டு வரும் சூழலில், நடிகை திரிஷா தொடர்பான அரசியல் விமர்சனங்கள் அண்மைக்காலமாக மேலெழுந்து வருகின்றன. ஏற்கனவே காவிரி நீர் பிரச்சனை குறித்த போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு தணிவதற்குள்ளேயே, தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடிகை திரிஷா குறித்துப் பேசிய கருத்துகள் அடுத்தகட்ட அரசியலைக் சூடேற்றியுள்ளன.

கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் காவிரி தண்ணீருக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போராடும் என்று பார்த்தால், எங்கள் அண்ணி திரிஷாவிற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், “சட்டசபைக்கு வந்து முதலமைச்சர் விஜய் கலகலப்பாக இருக்க வேண்டாமா? மக்கள் உங்களுக்கு நல்வாய்ப்பை கொடுத்தும் எதையோ பறிகொடுத்தது போல் உட்கார்ந்திருக்கிறாரே” என்று விமர்சித்தார். அப்போது அருகிலிருந்தவர்கள் ‘மூனுஷா’ எனச் சுட்டிக்காட்டியபோது, “எங்கள் அண்ணனுக்குத் தெரிந்தது எல்லாம் திரிஷா மட்டும்தான்” எனக் கூறியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

   

இந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாரின் அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் கண்டன போஸ்டர்கள் தீவிரமாக ஒட்டப்பட்டு வருகின்றன. “எங்கள் அன்பு அக்கா திரிஷா பற்றி யார் தவறாகப் பேசினாலும் அதை சகித்துக் கொள்ள முடியாது; மீறிப் பேசினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் வெடிக்கும்” என அந்த போஸ்டர்களில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

   

திரையுலகைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்ந்து அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என நற்பணி மன்ற நிர்வாகிகளும் நடிகை திரிஷாவின் ஆதரவாளர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை போஸ்டர்கள், தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் புதிய புயலைக் கிளப்பியுள்ளதுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.