சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையவழியில் இலவசப் பரிசுகள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் ‘கேஷ்பேக்’ சலுகைகள் வழங்குவதாக வரும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் ‘லிங்க்’குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் நமது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கித் தரவுகள் திருடப்பட்டு, கணக்கில் உள்ள பணம் முழுவதும் அள்ளப்படும் அபாயம் உள்ளது. பண்டிகை காலங்களை இலக்காகக் கொண்டு இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் விழிப்புடன் இருக்குமாறும், சரிபார்க்கப்படாத எந்தவொரு சலுகை இணைப்பையும் திறக்காமல் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
