“அடடா… இவங்க கெத்த யாருமே அசைக்க முடியாதுப்பா… விநாயகர் ஊர்வலத்தில் மாஸ் காட்டிய பெண்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!”

By Swetha on ஆவணி 10, 2026

Spread the love

மும்பையின் பிரபலமான ‘பரேல் சா விக்னஹார்தா’ விநாயகர் சிலை வருகை ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 9, 2026 அன்று பரேல் பணிமனை வாயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள, காவிக்கொடிகள், குலால் பொடிகள், மேள தாளங்கள் மற்றும் “கணபதி பாப்பா மோரியா” கோஷங்களுடன் இந்த விழா உற்சாகமாகத் தொடங்கியது.

இந்த ஊர்வலத்தின் போது, பெண்களின் குழு ஒன்று தயிர் பானையை சுற்றி மனித பிரமிடு அமைத்து விநாயகருக்கு விசேஷ அஞ்சலி செலுத்தியது. கணேச உத்சவ் மற்றும் தஹி ஹண்டி ஆகிய இரண்டு பாரம்பரிய விழாக்களையும் இணைக்கும் விதமாக அமைந்த இந்த அசத்தலான காட்சி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

   

https://www.instagram.com/reel/Db0hTfWI7-R/?utm_source=ig_web_button_share_sheet

   

இன்ஸ்டாகிராமில் வைரலான இக்காணொளியைப் பார்த்த பயனர்கள், “மும்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கூட்டணி” என்றும், சிலிர்ப்பையூட்டும் தருணம் என்றும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வரும் செப்டம்பர் 14 அன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கவுள்ள நிலையில், இந்த வைரல் நிகழ்வு மும்பை மக்களிடையே பண்டிகை கால உற்சாகத்தையும் பக்தியையும் மேலும் அதிகரித்துள்ளது.