ஆடு மேய்க்கப்போன தம்பி எங்கே?…கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… மனைவியும் கள்ளக்காதலனும் செய்த பகீர் காரியம்… பதறவைக்கும் பின்னணி…!!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திற்கு உட்பட்ட கடகலதா கிராமத்தில் வசித்து வந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியான ரகு கவாடே. இவரது மனைவி பங்காரிக்கும், ரகுவின் உறவுக்காரரான ராம ராணா என்பவருக்கும் இடையே திருமண தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் ரகுவிற்குத் தெரியவந்ததையடுத்து, அவர் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். எனினும், அவர்கள் தங்களது தகாத உறவை கைவிடாமல் ரகசியமாகத் தொடர்ந்துள்ளனர்.

தங்களது தனிமை சந்திப்புகளுக்குத் தடையாக இருக்கும் ரகுவை கொலை செய்ய பங்காரியும் ராம ராணாவும் சதி திட்டம் தீட்டினர். இதன்படி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ரகுவை கழுத்தை நெரித்துக் கொன்ற அவர்கள், யாருக்கும் தெரியாமல் சடலத்தை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைத்துவிட்டனர். கணவர் எங்கே என்று குடும்பத்தினர் கேட்டபோதெல்லாம், அவர் ஆடு மேய்ப்பதற்காக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறி பங்காரி தொடர்ந்து நாடகமாடி வந்துள்ளார்.

   

மாதங்கள் பல கடந்தும் தம்பி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரகுவின் அண்ணன் லகமன்னா, இது குறித்து சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் பங்காரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது பதில்களில் முரண்பாடு இருந்ததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கணவனைக் கொன்று உடலை புதைத்த உண்மையை பங்காரி ஒப்புக்கொண்டார். உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.