தமிழகமே ஷாக்…. “ரூ.986 கோடி திட்டம்… 2,233 ஏக்கர் நிலம்”…. திடீரென தனியார்மயமாக்கப்படும் தமிழகத்தின் பெருமை?…. ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை…!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் 2,233 ஏக்கர் பரப்பளவில் ரூ.986 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டத்தில், அலுவலகக் கட்டடங்கள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ் மற்றும் ராக்கெட் லாஞ்சிங் பேட் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமான கட்டத்தை எட்டியுள்ளன. ஒன்றிய அரசின் விண்வெளித் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட திட்டம், நாட்டின் விண்வெளிப் பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்காக ஒன்றிய அரசின் ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACe) நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தனியார்மயமாக்கப்படுவது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. விண்வெளித் துறையினரின் எதிர்ப்புகளையும் மீறி, இந்த ஏவுதளத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை தனியார் வசம் வழங்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.