கர்நாடக-தமிழ்நாடு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நித்தாலப்புரா கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்குள் காட்டுயானைகள் கூட்டம் புகுந்ததால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி, அதை அப்படியே தூக்கிச் சென்றன. இந்த விசித்திரமான சம்பவம் அங்குள்ள பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
எல்லை யோரப் பகுதிகளில் காட்டுயானைகள் தொடர்ந்து நடமாடி வருவதால், பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு மேலும் சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உறைந்துள்ளனர். யானைகளின் இந்தத் திடீர் வருகை அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2086024860036469119/video/1
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், நிலமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
