மக்களே உஷார்… ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?… நாளைக்குள் இதை செய்யலைனா ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?… அரசின் அதிரடி எச்சரிக்கை…!

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 11.50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில் 96 சதவீத உறுப்பினர்கள் வரை பயோமெட்ரிக் பதிவு செய்துள்ள நிலையில், இறப்பு காரணமாக பெயர் நீக்கம் செய்யப்படாதவர்களைக் கண்டறியவும், விடுபட்ட 2.5 லட்சம் பேரின் கைரேகையைப் பதிவு செய்யவும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகவும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது பிஓஎஸ் இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பயோமெட்ரிக் செய்யப்படாத உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்களின் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த கைரேகை பதிவு அவசியமாகிறது.

   

முன்னதாக ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாமல் இருந்த 4 லட்சம் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகளால் 1.40 லட்சம் பேர் தங்களது பதிவை முடித்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் 14 ஆயிரம் பேர் பயோமெட்ரிக் வைத்துள்ளனர். விடுபட்ட எஞ்சிய உறுப்பினர்களின் வசதிக்காக நேற்றும் இன்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, ரேஷன் கார்டில் பெயர் இருந்து இதுவரை கைரேகை பதிவு செய்யாத நபர்கள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் பதிவை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.