எங்க போனான்னு தெரியல..!மகளைத் தேடி அலைந்த பெற்றோர்… ஆந்திராவில் காத்திருந்த பேரதிர்ச்சி… லாரி டிரைவரின் லீலைகள் அம்பலம்…!!

By Gayathri on ஆவணி 8, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான லாரி ஓட்டுநர் பிரகாஷ், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைத் கூறி, திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து அவரை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். இருவரும் சுமார் மூன்று மாதங்களாக அங்கேயே தங்கியிருந்த நிலையில், மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தனிப்படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, தேடப்பட்டு வந்த இருவரும் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அங்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்ட போலீசார், ஓட்டுநர் பிரகாஷைப் பிடித்து விசாரணைக்காக வேலூருக்குக் கொண்டு வந்தனர்.

   

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், ஐந்து குழந்தைகளும் இருப்பது அம்பலமானது. மைனர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற குற்றத்திற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்காக, அவர் தற்போது அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.