“அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா”…. உதயநிதி கைதுக்கு மத்தியில் மலையாள நடிகர் தியான் போட்ட நக்கல் போஸ்ட்….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சை பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் மீம்களாக வைரலாகி வருகின்றன. இதற்கு முன்பாக, மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தனது பட விழாவில், “நான் கேரள முதலமைச்சராகப் பதவியேற்கும் போது நடிகை நவ்யா நாயர் முதல் வரிசையில் புடவை அணிந்து கண்கலங்கியபடி அமர்ந்திருப்பார்” என்று விஜய் – த்ரிஷாவின் பதவியேற்பு விழா தருணத்தைக் மறைமுகமாகக் குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

தற்போது உதயநிதியின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையாள நடிகர் மம்மூட்டியின் ‘அண்ணன் தம்பி’ படக் காட்சியை வைத்து இணையவாதிகள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மீம் வீடியோ ஒன்றிற்கு நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், “ஹாஹா… அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா!” என நக்கலாகப் பதிலளித்துள்ளார். இவரின் இந்த சுவாரஸ்யமான கமெண்ட்டும், அது தொடர்பான மீம்களும் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகின்றன.