ஐயோ பாவம்… தனியாக இருந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… சக மாணவன் செய்த காரியம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… லக்னோவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

லக்னோவின் பார் பகுதிக்குட்பட்ட நர்பத்கேடாவில், 17 வயதான பிசிஏ முதலாம் ஆண்டு மாணவி ஸ்மிருதி பாண்டே தனது வீட்டின் முதல் தளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடன் படித்து வந்த அலம்நகரைச் சேர்ந்த 18 வயதான தேவன்ஷ் பதக் என்பவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மாணவியின் சடலத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் மாணவியின் கழுத்தை அறுத்து அவளது சக வகுப்பு மாணவனான தேவன்ஷே இக்கொலையைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சமயத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான மாணவியின் தந்தை கான்பூரிலும், சகோதரன் பிரயாக்ராஜிலும், தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அமேதியில் உள்ள சொந்த ஊருக்கும் சென்றிருந்தனர். மாணவியும் அவளது தங்கை ஜாக்ரிதியும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். புதன்கிழமை மாலையில் கல்லூரி முடிந்து தங்கை வீட்டிற்குத் திரும்பியபோதே இக்கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

   

வீட்டின் படுக்கையறைக்கு அருகே ஸ்மிருதி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதையும், அருகே தேவன்ஷ் ரத்தக் காயங்களுடன் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கை சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரையும் காவல் துறையினரையும் அழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள துணை காவல் ஆணையர் கமலேஷ் தீக்சித் தலைமையிலான காவல் துறையினர், இக்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.