சமையல் செய்யல…. ரீல்ஸ் மோகம்…. மனைவியை கொன்று போர்வையில் சுருட்டி எறிந்த கணவர்…. பெங்களூருவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்….!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த தீரஜ் குமார் (24) என்பவரும் ரீமா குமாரியும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கும்பல்கோடு பகுதியில் வசித்து வந்தனர். ரீமா எப்போதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதிலேயே முமுரமாக இருந்ததாகவும், கணவரை சரியாக கவனிக்காமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று சமையல் செய்யாதது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்ததில், ஆத்திரமடைந்த தீரஜ் தனது மனைவியின் முக்காட்டாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை படுக்கை விரிப்பில் சுற்றி வீட்டில் போட்டுவிட்டு பீகாருக்குத் தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய தீரஜைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரீமா தனக்கு மட்டுமே உணவு சமைத்துக் கொண்டு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவருக்கு உணவு வழங்காததே இந்தக் கொலைக்கு உடனடி காரணமாக அமைந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.