அடச்சீ… எங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது… படிப்பை விட்டு ஓடிப் போய் கல்யாணம்… 10-ஆம் வகுப்பு ஜோடியின் ரீல்ஸ் வீடியோ… தந்தை உயிருக்குப் போராட்டம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

By Swetha on ஆவணி 7, 2026

Spread the love

சமீபத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவ வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில், காதலில் விழுந்த இவர்கள், தாங்கள் சுயமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும், தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ எந்தப் பாதிப்பும் அச்சுறுத்தலும் வரக்கூடாது என்றும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். வீடியோவின் முடிவில் சிறுமி, சிறுவனுக்குச் சிந்தூரம் அணிவித்து அவனது காலிலும் விழுந்து வணங்குகிறார்.

சிறு வயதிலேயே தவறான புரிதலால் எடுக்கப்படும் இதுபோன்ற அவசர முடிவுகள், சம்பந்தப்பட்ட சிறுவர்-சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரையும் மீள முடியாத துயரத்தில் தள்ளிவிடுகிறது. சட்டப்பூர்வமாக திருமண வயது எட்டாத நிலையில், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையின் திசையையே மாற்றிவிடும் என்பதை இந்த இளம் தலைமுறையினர் உணர்வதில்லை.

   

தன் மகள் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட செய்தியைக் கேட்ட சிறுமியின் தந்தை, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் இந்த அநாவசியமான செயலால் ஒரு குடும்பத்தின் அமைதியும், ஒரு தந்தையின் உயிரும் இன்றைக்குக் கேள்விக்குறியாகியுள்ளது.