ஐயோ… 12 மணி நேர வேலை… குறைந்த சம்பளம்… எதற்கு இந்த வாழ்க்கை?… ஹோட்டல் துறையை விட்டுவிட்டு… ஆகாயத்தில் பறக்கும் வைரல் அழகி…!!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

அகசா ஏர் விமான பணிப்பெண்ணான இஷா, தனது ஹோட்டல் துறை பணியை விட்டுவிட்டு விமானத் துறைக்கு மாறியதற்கான காரணங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஹோட்டல் துறையில் 12 மணி நேரத்திற்கும் மேலான நீண்ட பணி நேரங்கள், குறைந்த ஊதியம், வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான இடைவெளி இல்லாமை, வேல பாராட்டு இன்மை மற்றும் இடைவிடாத மன அழுத்தம் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும், தனது உழைப்பிற்கான அங்கீகாரம் பெறவும் நினைத்த இஷா, விமான பணிப்பெண் பணியைத் தேர்ந்தெடுத்தார். இத்துறையில் சிறந்த தொழில் வளர்ச்சி, நல்ல வாய்ப்புகள் மற்றும் தனது உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு கிடைப்பதாக அவர் உணர்கிறார். எந்தவொரு துறையிலும் நேர்மையாக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையும் பாராட்டும் கிடைக்க வேண்டும் என்பதே இவரது கருத்தாகும்.

   

எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அதில் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் உழைக்கும் பணியாளர்களுக்குச் சிறிய அளவிலான பாராட்டாவது கிடைக்க வேண்டியது அவசியமாகும். உழைப்புக்கான அங்கீகாரம் மறுக்கப்படும்போது மன அழுத்தமும் விரக்தியும் ஏற்படுவது இயல்பு. ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்ற பணிச்சூழலையும் அங்க ரோலிங் காரத்தையும் வழங்குவதே ஒரு துறையின் உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.