சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ராகேஷ் என்பவரைக் காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த இவர், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்த கணவருடனான புகைப்படங்கள் அனைத்தையும் அவர் திடீரென நீக்கியுள்ளது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 6 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இவர் கணவரைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்தத் தகவல் குறித்து நடிகை சைத்ரா ரெட்டி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
