அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரித் தொடக்கத்தில் தேவைப்படும் பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏற்படும் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதியுதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் மட்டுமன்றி, மாணவர்களின் நலன் சார்ந்த மற்றும் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பலத்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
