ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள மாவாய் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான கீதா தேவி என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை காலை தன் அண்டை வீட்டாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் தினமும் அப்பெண்ணின் வீட்டின் வாசலில் வந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறின் போது கீதா தேவி அவரைத் தாக்கியதால் ஆத்திரமடைந்த அந்நபர், அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட கீதா தேவியின் மகள் குடியா அளித்த வாக்குமூலத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வாசலில் நின்றிருந்த அந்நபரைத் தட்டிக்கேட்டபோது தகராறு முற்றியுள்ளது. அப்போது கீதா தேவி அவரை அறைந்ததால், “ஒரு மணி நேரத்திற்குள் உங்களை கொன்றுவிடுவேன்” என மிரட்டிவிட்டு அவர் சென்றுள்ளார். கூறியபடியே ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த அந்நபர், வயலில் இருந்து புல் சுமந்து வந்த கீதா தேவி தன் மீது தடியால் தாக்கியதால், அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ஒரே ஒரு முறை சுட்டுள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2084600172533686387/video/1
காயமடைந்த கீதா தேவி பரத்பூரில் உள்ள ஆர்.பி.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைத் தப்பிச்செல்ல முயன்றபோது உள்ளூர் கிராம மக்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி/வீடியோ ஆதாரங்களை டீக் எஸ்பி காம்ப்ளே சரண் கோபிநாத் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
