“அய்யோ என்னடா… திரிஷா என்ன பிரதமரா?… உலக மகா தப்பா?… உதயநிதி திடீர் கைதால்… மேடையில் கிளம்பிய சர்ச்சை… விஜய் அரசை கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி…!”

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் திரையில் மட்டுமே ஜனநாயகம் பற்றி நடித்தாரே தவிர, நடைமுறையில் அவருக்கு ஜனநாயகம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், ஆட்சியில் இருக்கும் அவர் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார் என்றும் சாடினார்.

டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி தண்ணீர் சென்றடைந்தது குறித்து கூட்டத்தில் பேசியபோது, கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் ‘தண்ணீர் வரவில்லை’ என்ற ஆதங்கத்தில் திரிஷாவின் பெயரைப் பயன்படுத்தியதாக ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்தார். திரிஷா ஒன்றும் நாட்டின் பிரதமரோ அல்லது முதலமைச்சரோ இல்லை என்றும், இந்தச் விவகாரத்தில் அவரே நேரடியாக எந்தப் புகாரும் அளிக்காத நிலையில், அவதூறு வழக்கில் உதயநிதியை அவசர அவசரமாகக் கைது செய்தது தேவையற்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

முந்தைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற பல விமர்சனங்கள் எழுந்தபோதும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த வீண் கைது நடவடிக்கை மூலம் உதயநிதி ஸ்டாலினை ‘இளைய கலைஞர்’ தலைவராக விஜய் உருவெடுக்க வைத்துள்ளார் என்றார். வரவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பயந்தே, ஆளில்லா மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.