அட கொடுமையே… நண்பனின் வீட்டிற்குச் சென்ற 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… தந்தை செய்த அரக்கத்தனம்… சிக்கிய தொடர் குற்றவாளி… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

கொடுடூரமான இந்தச் சம்பவத்தில் 8 வயது சிறுவன் தனது நண்பனின் வீட்டில் தங்கியிருந்தபோது, நண்பனின் தந்தையாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடக்கும்போது இறந்த சிறுவனின் நண்பனும் அதே அறையில் உள்ள அடுக்கு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி, இதுவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற அதிர்ச்சி தகவலும் நீதிமன்ற விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2023 ஜூன் 15 அன்று தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு, மேற்கு கேப் உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மற்றொரு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு, இத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குற்றவாளி பாலியல் குற்றவாளிகளுக்கான தேசியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கும் நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

   

இறுதியாக இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரான மரியா ஜாம்னெக்கிற்கு ஒரு முக்கியமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி எதிர்காலத்தில் எப்போதாவது பரோல் அல்லது விடுதலைக் கோரி விண்ணப்பித்தால், அதை எதிர்த்து பரோல் வாரியத்திடம் முறையிடும் உரிமை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம் அநியாயமாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளது.