அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாநில அளவிலான முக்கிய பதவிகளை வழங்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெறவிருக்கும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் தவெகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
