“என் சாவுக்கு யாரும் காரணமில்லை…” பெற்றோர் சொன்ன மேற்படிப்பு… வாக்குவாதம்… பி.இ. பட்டதாரி இளைஞரின் சோகம்… கண்ணீர் கடிதம்… கதறும் பெற்றோர்…!

By Visaka on ஆவணி 1, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில், பி.இ. பட்டதாரியான 26 வயது இளைஞர் ஜினேஷ் மூர்த்தி வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை திருமாலின் முட்டை மொத்த வியாபாரத்தில் உதவி வந்த ஜினேஷ் மூர்த்திக்கும், அவரது பெற்றோருக்கு இடையே மேற்படிப்பு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரவில் தனது அறைக்குச் சென்று தூங்கியவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது, “எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” என்று ஜினேஷ் மூர்த்தி கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் விருப்பத்திற்கும் அவரது லட்சியத்திற்கும் இடையே ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.