தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துத் துறையின் அடையாளங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி, தவெக கட்சியின் கொடி வண்ணங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த வெள்ளை நிறத்திற்குப் பதிலாக மாற்றப்பட்டுள்ள இந்தச் செயலியின் முகப்பில், முதலமைச்சர் விஜய்யின் படமும் அரசு போக்குவரத்து கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளன.
செயலி மட்டுமின்றி, இனி புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறத்தையும் தவெக கொடியின் வண்ணத்திலேயே மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பேருந்துகள் மற்றும் செயலியின் வண்ணங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பெயர்களையும் தவெக அரசு தொடர்ந்து மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
