“சார்ஜ் போட வந்த வாலிபர்…” வயிற்று வலியில் துடித்த சிறுமி…! ஹாஸ்பிடல் அழைத்து சென்ற தாய்க்கு அதிர்ச்சி… 9 மாதங்கள் கழித்து அம்பலமான பகீர் தகவல்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 15 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 2025 நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது உறவினரான 25 வயது மோகன் என்பவர் கைபேசிக்கு சார்ஜ் போடுவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அச்சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, இச்சம்பவத்தை வெளியில்கூறினால் அவமானம் ஏற்படும் எனப் பயமுறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.

சமீபத்தில் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது தாயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி 9 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.