சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவு எதிரொலியாக, தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை விலையில் இன்று ஜூலை 28 அதிரடி குறைவு ஏற்பட்டுள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோர் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடர்ந்து இந்த விலை நிலவரம் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே உருவாக்கியுள்ளது.
