ஆக்ரா-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில், உத்திரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே இரவு சுமார் 10 மணியளவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் பைக்கில் இளைஞர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் ஆபத்தான முறையில் சாகசம் செய்து சென்றுள்ளனர். அதில் அந்தப் பெண் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு காதலை வெளிப்படுத்தும் வகையில் செய்த இந்த செயல், அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த ஆபத்தான பயணத்தைக் கண்ட சக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், அவர்களின் பாதுகாப்பைக் கருதி அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு அந்த இளம் பெண் சற்றும் கவலைப்படாமல், “சரி வா போலாம்… உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்று அலட்சியமாகவும் அலட்சியப் போக்கிலும் பதில் கூறியதாகத் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதோடு, அறிவுரை கூறியவர்களையும் அலட்சியப்படுத்தியது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
https://twitter.com/MandeepRajBhar9/status/2081587794800263298/video/2
சாலையில் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்த இந்த சாகச வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இரவில் அதிவேகமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட நபா்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
