அட கொடுமையே… காதலனுடன் தங்கிய வெளிநாட்டு இளம்பெண்… பாலியல் சீண்டல் செய்த வாலிபர்… அடுத்து நடந்த அதிரடி விபரீதம்… ஐதராபாத்தில் பரபரப்பு…!!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

ஐதராபாத்தில், தனது காதலனுடன் ஒன்றாக தங்கியிருந்த வெளிநாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் காதலனுடன் இந்தியாவில் தங்கி இருந்த சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர்கள் தங்கியிருந்த அதே வீட்டில், காதலனின் நண்பரான பீகாரைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்த் என்பவரும் உடன் தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று ஆதித்யா ஆனந்த் அந்த வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் இளம்பெண்ணின் காதலன் திடீரென உள்ளே நுழைந்ததும், பயந்துபோன ஆனந்த் அமைதியானார்.

   

இந்தியாவில் தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தால் மனமுடைந்த அந்த இளம்பெண், உடனடியாக நெதர்லாந்து நாட்டுக்கு திரும்பிச் சென்றார். பின்னர் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆனந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.