குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்கும் மகளிருக்கு ரூ.5,000…. அதிரடி அறிவிப்பு…. மாஸ் காட்டும் அன்புமணி ராமதாஸ்…!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2026 – 2027ஆம் நிதியாண்டுக்கான ‘நிழல் பட்ஜெட்டை’ அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு அரசுக்கு மொத்தம் 341 முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயர் சூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது; மேலும், மக்கள் நல்வாழ்வை உறுதிசெய்யும் நோக்கில் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களும் இந்த நிழல் பட்ஜெட்டில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன.