“திடீரென்று என்னாச்சு…?” வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்த மாணவர்கள்…. விடுதியில் சாப்பிட்ட பிறகு விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on ஆடி 27, 2026

Spread the love

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் டிட்வா கிராமத்தில் இயங்கி வரும் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இரவு உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உடனேயே பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

தற்போது மாணவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தின்றி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர். இதனிடையே, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரக் குறைபாடுதான் இந்த நச்சுத்தன்மைக்குக் காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.