“என்னது…” இனி ரூ.2500 கிடையாதா?… அதிர்ச்சியில் மிரண்டுபோன பெண்கள்… மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான உண்மை…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கள் பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கழித்தே ரூ.1,000 வழங்கியதை சுட்டிக் காட்டிய அவர், தமிழகத்தின் தற்போதைய கடுமையான கடன் சுமையை முழுமையாகச் சரிசெய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளதோடு, அரசின் நிதிநிலை மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்த விவாதங்களையும் பொதுவெளியில் தீவிரப்படுத்தியுள்ளது.