மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்; இவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் பஞ்சாப் முதல்வர் பீந்த் சிங்கின் பேரனான இவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் கட்சியின் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
