மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பினர் நடத்திய ஆதரவுப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் பெண் போராட்டக்காரரை முரட்டுத்தனமாகத் தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட், காவல்துறையினரின் இந்த வரம்பு மீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
எனினும், முழுமையான பின்னணி தெரியாமல் வைரலாகும் இந்த வீடியோவை மட்டும் வைத்து முடிவெடுக்க முடியாது எனச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுமதி இன்றி பேரணி நடத்தியதாகக் கூறி 300-க்கும் மேற்பட்டோரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக இந்த இயக்கம் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
